சுடச்சுட

  

  விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு கிடைக்குமா? இன்று இறுதிக் கட்ட பேச்சு வார்த்தை

  By dn  |   Published on : 30th June 2016 07:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சத்திரப்பட்டி பகுதி விசைத்தறி தொழிலாளர்கள் பிரச்னைக்கு வியாழக்கிழமை நடைபெறும் இறுதிக் கட்ட பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்பட்டு கூலி உயர்வு கிடைக்குமா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

   சத்திரப்பட்டி வட்டாரப் பகுதிகளில் கூலி உயர்வு கோரி விசைத்தறி தொழிலாளர்களும், மாஸ்டர் வீவர்ஸ் சங்கத்தினரும் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 6 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எவ்வித முடிவும் எட்டப்பட வில்லை. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை சத்திரப்பட்டி பேண்டேஜ் துணி உற்பத்தியாளர்கள் சங்க அலுவலகத்தில் தொழிலாளர் துறை இணை ஆய்வாளர் சரவணன், கைத்தறி துறை அமலாக்கப் பிரிவு திட்ட இயக்குநர் சங்கரவேல் பாண்டியன் ஆகியோர் தலைமையில் 7ஆவது முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

  இதில், பேண்டேஜ் துணி உற்பத்தியாளர்கள், சிறு விசைத்தறி உற்பத்தியாளர்கள் மற்றும் விசைத்தறி தொழிலாளர் போராட்டக் குழுவினர் பங்கேற்றனர். 12 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை எந்த முடிவும் எடுக்கப்படாமல் முடிவடைந்தது. மீண்டும் வியாழக்கிழமை (ஜூன் 30) இறுதிக் கட்ட பேச்சு வார்த்தை நடத்தப்படும் என துணை ஆணையர் சரவணன் தெரிவித்தார். இறுதிக் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால் கஞ்சித் தொட்டி திறக்கப்படும் என போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.

  இதற்கிடையே இறுதிக் கட்ட பேச்சுவார்த்தையிலாவது தீர்வு ஏற்பட்டு கூலி உயர்வு கிடைக்குமா என விசைத்தறி தொழிலாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai