சுடச்சுட

    

    விருதுநகரில் ரயில் மறியலுக்கு முயன்ற 55 வழக்குரைஞர்கள் கைது

    By விருதுநகர்  |   Published on : 30th June 2016 07:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகரில் உயர்நீதிமன்ற உத்தரவை நீக்கக் கோரி ரயில் மறியல் செய்ய முயன்ற வழக்குரைஞர்கள் 55 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

     தங்களது கோரிக்கையை வலியுறுத்தி ஏற்கெனவே வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அவர்கள் அறிவித்தனர்.

    இதையடுத்து விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் 55 பேர் ஊர்வலமாக விருதுநகர் ரயில் நிலையம் வந்தனர். அங்கு வழக்குரைஞர்களுக்கு எதிரான சட்டத் திருத்தத்தை வாபஸ் பெறக் கோரி ஆர்ப்பாட்டம் செய்து ரயில் மறியலுக்கு முயன்றனர். அவர்களை போலீஸார் கைது செய்து பின்னர் மாலையில் விடுவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai