சுடச்சுட

  

  ஸ்ரீஆண்டாள் ஆடிப்பூர தேரோட்ட முன்னேற்பாடு ஆய்வுக் கூட்டம்

  By ஸ்ரீவில்லிபுத்தூர்  |   Published on : 30th June 2016 07:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெறவுள்ள ஸ்ரீஆண்டாள் ஆடிப்பூர தேரோட்டத்துக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை மாவட்ட ஆட்சித் தலைவர் (பொறுப்பு) தலைமையில் நடைபெற்றது.

   கூட்டத்துக்கு கோயில் தக்கார் கி.ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். கோயில் செயல் அலுவலர் சா.ராமராஜா வரவேற்றார். அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் ஆட்சித் தலைவர் (பொறுப்பு) சி.முத்துக்குமரன் பேசியதாவது: தேரோட்டத் திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும். தங்கள் தங்கள் துறைகளின் கீழ் செய்யப்பட வேண்டிய பணிகள் தற்போது விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆய்வுக் கூட்டத்தில் இப்பணிகளின் முன்னேற்றம் குறித்து அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும். தேரோடும் 4 வீதிகளிலும் நகராட்சி நிர்வாகம் குடிநீர் இணைப்பு உள்ளிட்ட எந்தப் பணிக்கும் சாலையை தோண்டக் கூடாது.

  இப்பகுதிகளில் தேங்கும் குப்பைகள் உடனே அப்புறப்படுத்தப்பட வேண்டும். காவல்துறையினர் தனியே விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். தேரோட்டம் ஆகஸ்டு 5 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக 2 அல்லது 3 ஆய்வுக் கூட்டங்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடத்தப்படும் என்றார்.

   கூட்டத்தில், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் மு.சந்திரபிரபா, நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி, வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி கனகுஅம்மாள் சுப்புராஜ், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் வி.டி.முத்துராஜ், நிலவள வங்கித் தலைவர் சிந்து முருகன், மாவட்ட கவுன்சிலர் த.முத்தையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai