பேரிடர் மேலாண்மை கருத்தரங்கம்

ராஜபாளையம் அருகேயுள்ள சுரன் நர்சிங் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை கருத்தரங்கம் நடைபெற்றது.
Published on

ராஜபாளையம் அருகேயுள்ள சுரன் நர்சிங் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை கருத்தரங்கம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் கே.பி. சுப்பிரமணியராஜா தலைமை வகித்தார். நிர்வாக அதிகாரி ராஜா முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் பாண்டியம்மாள் வரவேற்றுப் பேசினார். பேரிடர் மேலாண்மை ஒருங்கிணைப்பாளர் பவுல் பேட்ரிக் டேவிட் பேரிடரின் போது பொது மக்களை எவ்வாறு தயார்படுத்துவது என்பது பற்றி பேசினார். விழுப்புரம் பவுல்ஸ் நர்சிங் கல்லூரி முதல்வர் லதா, பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு செவிலியரின் பணி மற்றும் பங்கு பற்றி விளக்கினார். கல்லூரி துணை முதல்வர் முத்துமாரி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com