ராஜபாளையம் தாட்கோ காலனியைச் சேர்ந்த பால் மாணிக்கம் மகன் ஆசீர்வாதம்(50). இவர் ராஜபாளையம் நகராட்சி பொறியியல் பிரிவில் தலைமை எழுத்தராகப் பணி புரிந்து வந்தார். இந்த நிலையில், இவர் கடந்த 2 நாள்களுக்கு முன் பணியை முடித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாராம். அப்போது முடங்கியார் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, மாடு ஒன்று குறுக்கே வந்ததால் ஆசீர்வாதம் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் புதன்கிழமை இரவு உயிரிழந்தார். இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.