அருப்புக்கோட்டை ஸ்ரீசெüடாம்பிகா பொறியியல் கல்லூரி பெண்கள் முன்னேற்ற அமைப்பின் மூலம் மாணவிகளுக்கான மருத்துவ விழிப்புணர்வு கலந்துரையாடல் திங்கள்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சிவக்குமார் தலைமை வகித்தார். ஆங்கிலத்துறைப் பேராசிரியை அனிதா ராதா ரூபாவதி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினரான பெண்கள் முன்னேற்ற அமைப்பின் சார்பில் மருத்துவர் பிருந்தாஜெகந்நாதன் மருத்துவக்குறிப்புகளை விளக்கிக் கூறினார் மேலும் மாணவிகளின் கேள்விகளுக்கும் பதிலளித்தார். ஒருங்கிணைப்பாளர் புவனேஸ்வரி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். இயந்திரவியல் பேராசிரியை ஜனனி நன்றி தெரிவித்தார்.