Enable Javscript for better performance
அனுமதியின்றி இயங்கிய தீப்பெட்டி ஆலைகளுக்கு சீல்- Dinamani

சுடச்சுட

    

    பேரையூர் தாலுகாவில் அனுமதி பெறாமல் இயங்கிய மூன்று தீப்பெட்டி ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

        மதுரை மாவட்ட ஆட்சியர் இல. சுப்ரமணியம் உத்தரவின் பேரில் பேரையூர் வட்டாட்சியர் ராஜு, வருவாய் ஆய்வாளர் வீரமுருகன் மற்றும் வருவாய்த்துறையினர் சிலைமலைப்பட்டி, எஸ்.கீழபட்டி, எழுமலை ஆகிய பகுதிகளில் உள்ள ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் சிலைமலைப்பட்டியில் உள்ள தீப்பெட்டி ஆலையில் ஆவணங்கள் சரியாக இல்லாததும், முறையாக அனுமதி பெறாமல் இயங்கியதும் தெரியவந்தது. முறையான விபத்து பாதுகாப்பு உபகரணங்கள், விதிகள் கடைபிடிக்கப்படவில்லை. இதே போன்று எஸ்.கோட்டைப்பட்டி, எழுமலையில் உள்ள தீப்பெட்டி ஆலைகளும் அனுமதியின்றி இயங்கின. இதையடுத்து மூன்று தொழிற்சாலைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது. இவற்றில் இருந்து 50 கிலோ சிவப்பு பாஸ்பரஸ் கைப்பற்றப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai