Enable Javscript for better performance
இதற்கு முன் எம்.பி.யாக இருந்த வைகோ தொகுதி மக்களுக்கு செய்தது என்ன? அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கேள்வி - Dinamani

சுடச்சுட

    

    இதற்கு முன் எம்.பி.யாக இருந்த வைகோ தொகுதி மக்களுக்கு செய்தது என்ன? அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கேள்வி

    Published on : 27th March 2014 02:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இதற்கு முன் எம்.பி.யாக இருந்த வைகோ விருதுநகர் மக்களவை தொகுதியில் எந்த திட்டங்களையும் செயல்படுத்தாமல், மக்களை ஏமாற்றி வருவதாக செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் திட்ட அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

         விருதுநகர் மக்களவை தொகுதியின் அதிமுக வேட்பாளர் டி. ராதாகிருஷ்ணனை ஆதரித்து விருதுநகர் சட்டப் பேரவை தொகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தனது ஆதரவாளர்களுடன் சென்று தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில் புதன்கிழமை மருளூத்து கிராமத்தில் பொதுமக்களிடையே பிரசாரம் செய்து அமைச்சர் பேசுகையில், தமிழகத்தில் அதிமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தி வந்துள்ளது.

      அதிலும், ஏழை, எளிய பெண்களின் திருமணத்துக்கு தாலிக்கு தங்கம், விலையில்லா பொருள்கள், கறவை மாடுகள், ஆடுகள் வழங்கும் திட்டம் ஆகியவைகளால் கிராம மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து வருகிறது. தற்போது, பா.ஜ.க. கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர் வைகோ இதற்கு முன்னர் மக்களவை தொகுதி உறுப்பினராக இருந்த போது என்ன செய்தார்? இத்தொகுதிக்கு என்று எந்த தொழிற்சாலையுமே அவர் கொண்டு வரவில்லை. இதெல்லாம் செய்யாமலே மீண்டும் இத்தொகுதியில் போட்டியிடுகிறார். அதோடு, இல்லாமல் வெற்றுப்பேச்சு பேசி தொகுதி பொதுமக்களையும் ஏமாற்றி வருகிறார். இதெல்லாம் இங்கு எடுபடாது. இத்தொகுதியில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையே தான் போட்டியே தவிர மற்ற கட்சிகளுக்கு இடையே கிடையாது என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

        இதேபோல், இனாம்ரெட்டிபட்டி, பட்டம்புதூர், வாய்ப்பூட்டான்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பேசினார். இப்பிரசாரத்தின் போது சட்டப்பேரவை உறுப்பினர் பாண்டியராஜன், தொகுதி செயலர் மற்றும் ஒன்றியக் குழு தலைவர் கலாநிதி, இணைச் செயலர் மாரியப்பன், ஒன்றியச் செயலர் மூக்கையா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai