Enable Javscript for better performance
திமுக கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    அருப்புக்கோட்டையில் புதன்கிழமை இரவு 7 மணிக்கு விருதுநகர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் எஸ். ரத்தினவேல் அறிமுகக் கூட்டம் மற்றும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்  நாடார்கள் உறவின்முறை திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

      இக்கூட்டத்துக்கு விருதுநகர் மாவட்ட திமுக செயலர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். திமுக தலைமைத் தேர்தல் பொறுப்பாளர் சேடபட்டி முத்தையா கலந்து கொண்டார்.  மாநில நெசவாளர் அணித் தலைவர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. பேசும் போது, அடுத்த சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்னோடியாக இம்மக்களவைத் தேர்தலில் மகத்தான வெற்றிக்கொடி நாட்டுவோம். கடலலை போல் திரண்டுள்ள செயல்வீரர்கள் கூட்டமே இதற்கு சாட்சி என்றார்.  இதில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலர் ஜோசப், புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலர் ராமராஜ், மனித நேய மக்கள் கட்சி மாவட்டச் செயலர் எம்.எஸ். முகம்மது இப்ராஹிம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலர் இப்ராஹிம் ஷா,அகில இந்திய பார்வர்டு பிளாக்  மாவட்டச் செயலர் எஸ்.பி. பாலசுப்பிரமணியன்,திராவிடர் கழக மாவட்டச் செயலர் தி. ஆதவன், பெருந்தலைவர் மக்கள் கட்சி  மாவட்டத் தலைவர் ஜி. மாரிக்கனி ஆதித்தமிழர் பேரவை மாவட்டத் தலைவர் பி. ஈஸ்வரன் மற்றும் நகர திமுக செயலர் ஏ.கே. மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai