Enable Javscript for better performance
திருச்சுழி தொகுதி வெற்றிச்சுழியாக மாறும்: தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ.- Dinamani

சுடச்சுட

    

    திருச்சுழி தொகுதி வெற்றிச்சுழியாக மாறும்: தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ.

    Published on : 27th March 2014 03:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்த தேர்தலில் திருச்சுழி தொகுதி வெற்றிச் சுழியாக மாறும் என்று முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு எம்எல்ஏ கூறினார்.

      ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட திருச்சுழி, நரிக்குடி ஒன்றிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் திருச்சுழியில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் சுப. தங்கவேலன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். கூட்டணி கட்சி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

            முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. வரவேற்று பேசியதாவது: வாக்கு எண்ணிக்கையின் போது அதிக வாக்குகள் பெற்று திருச்சுழி தொகுதி வெற்றிச்சுழியாக மாறும். மக்களவைத் தேர்தலில் 30 ஆயிரம் ஓட்டுகள் திருச்சுழி தொகுதியில் கூடுதலாக பெற்று முகமது ஜலீல் வெற்றி பெற பாடுபட வேண்டும். அதிமுக கூட்டணியில் தற்போது யாருமின்றி தனிக்கட்சியாக உள்ளது. தனிமரம் தோப்பாகாது. திமுக கூட்டணி உறுதிபடைத்த கூட்டணி.

        கடந்த திமுக ஆட்சியில் திருச்சுழி தொகுதிக்கு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசு கலைக்கல்லூரி துவக்க அனுமதித்ததை அதிமுக ஆட்சியில் வரவிடாமல் தடுத்து நிறுத்தினர்.

     திருச்சுழி தொகுதிக்கு இந்த ஆட்சியில் என்ன வளர்ச்சிப் பணிகள் செய்துள்ளனர்? அதிமுக.வினர் தான் வளமாக உள்ளனர். மக்கள் எங்கே வளமாக உள்ளனர். கடந்த திமுக ஆட்சியில் 2 மணிநேரம் தான் மின்தடை ஏற்பட்டது. ஆனால் இன்றைய அதிமுக ஆட்சியில் 10 மணிநேரம் மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதுதான் வளர்ச்சியா இவ்வாறு அவர் பேசினார்.

     கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் வேங்கடபதி, ரகுபதி, ஒன்றிய செயலர்கள் பொன்னுதம்பி, போஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai