Enable Javscript for better performance
தேர்தலை புறக்கணிக்க கிராமத்தினர் முடிவு- Dinamani

சுடச்சுட

    

    விருதுநகர் அருகே கிராமங்களில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காததால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தமிழ்நாடு அருந்ததியர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

        இது தொடர்பாக ஆட்சியர் அலுவலக புகார் பெட்டியில் புதன்கிழமை போடப்பட்ட மனுவில் அச்சங்கத்தின் மாநில இணை பொதுச் செயலர் சேகர் தெரிவித்திருப்பதாவது: விருதுநகர் பகுதி கிராமங்களில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் கிராம மக்கள் கொடுத்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், அருந்ததியர் குடியிருப்புகள் உள்ள திருச்சுழி, சென்னலைக்குடி, அருப்புக்கோட்டை, செட்டியாபட்டி, அழகியநல்லூர், சோலைக்கவுண்டன்பட்டி ஆகிய கிராமங்களில் குடியிருப்பு பகுதிகளுக்கு சாலை வசதி இல்லாமல் உள்ளது.  இதுபோன்று நரிக்குடி, ஆணிக்கனேந்தல், வளையங்குளம், ஓட்டங்குளம், வீரசோழன் பகுதிகளில் மயானங்களுக்கு செல்வதற்கு நடைபாதை இல்லை. இதேபோல், சாத்தூர் தொகுதியில் உள்ள ஊத்துப்பட்டி, ராஜபாளையம் அருகே வரகாணராமபுரம் கிராமங்களில் உள்ள பிரச்னைகளுக்கும் நடவடிக்கை இல்லை.  எனவே  மக்களவை தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணிக்கப் போகிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai