Enable Javscript for better performance
தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தேர்தல்- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரக் கிளை புதிய பொறுப்பாளர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நகர்மன்ற ஊரணிபட்டி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.

       தேர்தல் ஆணையாளராக வத்திராயிருப்பு வட்டாரச் செயலர் சி. ராஜூவும், துணை ஆணையாளராக வத்திராயிருப்பு வட்டாரத் தலைவர் ரத்தினமும் செயல்பட்டனர்.

    இதில் கீழ்க்கண்ட பொறுப்பாளர்கள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். வட்டாரத் தலைவர் எஸ்.எஸ். ஜெயசங்கர், துணைத் தலைவர்கள் ப. மைக்கேல் சந்திரசேகர், ஜெ. முனீஸ்வரன், ச. வெர்ஜின் தனசீலி. வட்டாரச் செயலர் க. ஜெயக்குமார். துணைச் செயலர்கள் வே. பிரகாஷ், வே. கணேசன், கோ. ராஜேஸ்வரி. பொருளாளர் ஞா. எட்வின் பாஸ்கரன், மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர்கள் சு. குமார், மா. கந்தசாமி, பொ. பழனிச்சாமி, அ. ராமபுலி அய்யனார், பொ. சுசிலா மற்றும் வட்டாரச் செயற்குழு உறுப்பினர்களாக 23 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai