Enable Javscript for better performance
நூறுநாள் வேலைதிட்டத்தை நிறுத்திவிட்டால் பட்டாசு தொழிலாளர்களுக்கு சம்பளம் குறைக்கப்படும்: மாணிக்கம் தாகூர்- Dinamani

சுடச்சுட

    

    நூறுநாள் வேலைதிட்டத்தை நிறுத்திவிட்டால் பட்டாசு தொழிலாளர்களுக்கு சம்பளம் குறைக்கப்படும்: மாணிக்கம் தாகூர்

    By dn  |   Published on : 27th March 2014 02:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்திய அரசின் நூறுநாள் வேலைதிட்டத்தை நிறுத்தி விட்டால் பட்டாசு தொழிலாளர்களுக்கு சம்பளத்தை ஆலை உரிமையாளர்கள் குறைத்து விடுவார்கள் என காங்கிரஸ் கட்சியின் விருதுநகர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் மாணிக்கம்தாகூர் கூறினார்.

      விருதுநகர் மக்களவை தொகுதிக்கு உள்பட்ட சிவகாசி சட்டப் பேரவைத் தொகுதியின் காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் சிவகாசியில் புதன்கிழமை நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது: முன்பு காங்கிரஸ் அந்நிய சக்திகளை எதிர்த்துப் போராடியது. தற்போது தவறுகளை தட்டிக் கேட்கும் கட்சியாக காங்கிரஸ் உள்ளது. ஒவ்வொரு நாளும் 25 கிராமங்களுக்கு மேல் பிரசாரம் செய்து வருகிறேன். காங்கிரஸ் கட்சி பண பலத்தையோ, ஆள் பலத்தையோ நம்பி களத்தில் இறங்கவில்லை. தொண்டர்கள் பலத்தை நம்பி உள்ளது.  வாக்காளர்கள் யாரை தேர்வு செய்ய வேண்டும் என தெளிவாக உள்ளார்கள்.

    இது சட்டப் பேரவை தேர்தல் அல்ல. திமுக, அதிமுக ஜெயிப்பதற்கு. என்னைப் பொறுத்தவரை திமுக, அதிமுக களத்தில் இல்லை என்று தான் கூறுவேன். வைகோ, மோடி அலைவீசுகிறது எனக் கூறி வருகிறார். அவர் என்ன ஜோதிடரா நூறுநாள் வேலைத் திட்டம் வந்த பின்னர், தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டால் பட்டாசு தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.300 முதல் ரூ.350 வரை சம்பளம் உயர்த்தப்பட்டது.

      காங்கிரஸ் தவிர வேறு ஆட்சி வந்தால் இந்த திட்டம் நிறுத்தப்பட்டு விடும். பின்னர் பட்டாசு தொழிலாளர்களுக்கு மீண்டும் குறைந்த சம்பளமே வழங்கப்படும். இதனை கிராமத்தினருக்கு எடுத்துக் கூறி காங்கிரசுக்கு ஆதரவு திரட்டுங்கள் என்றார் அவர். மாணிக்கம் தாகூர் எம்.பி.யாக இருந்த 5 ஆண்டு காலத்தில் அவர் செய்த சாதனைகள் புத்தகமாக வெளியிடப்பட்டது. இக்கூட்டத்தில் முன்னாள் நகர காங்கிரஸ் தலைவர் ராஜபாண்டியன். மாவட்ட செயலர் முருகேசன், தொகுதி மேலிடப் பார்வையாளர் சுதந்திரபாண்டியன், மாவட்ட பொருளாளர் பாஸ்கரன், திருத்தங்கல் சௌரிராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai