Enable Javscript for better performance
மின் கட்டண தகவல் பெற கைபேசி எண்ணை பதிவு செய்ய வேண்டுகோள்- Dinamani

சுடச்சுட

    

    மின் கட்டண தகவல் பெற கைபேசி எண்ணை பதிவு செய்ய வேண்டுகோள்

    By dn  |   Published on : 27th March 2014 02:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மின்கட்டணம், கடைசிநாள் உள்ளிட்ட விவரங்களை குறுந்தகவல் மூலம் அளிக்கும் வசதியை மின்வாரியம் அறிவித்துள்ளது. இதைப் பெற நுகர்வோர் கைபேசி எண்ணை மின் அலுவலகங்களில் பதிவு செய்து கொள்ளலாம்.

    விருதுநகர் மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் சுரேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நுகர்வோர்கள் மின் கட்டணங்களை அலுவலகம் சென்று செலுத்த வேண்டியிருந்தது. இதைத் தவிர்க்கும் வகையில் மின்வாரியம் இணையதளம் வழியாக கட்டணம் செலுத்தும் வசதியை ஏற்படுத்தியுள்ளது.

       இதன் மூலம் மின் நுகர்வோர் நெட்பேங்கிங், டெபிட்கார்டு, கிரடிட்கார்டு, தபால் அலுவலகம், மொபைல் போன் மற்றும் வங்கிகளின் மூலமாக மின் கட்டணம் செலுத்தலாம்.

    மின்கட்டணத் தொகையை முன்பணமாக செலுத்தினால் 9 சதவீதம் வட்டியும் வழங்கப்படுகிறது. நுகர்வோருக்கு குறுஞ்செய்தி மூலமாக மின் கட்டணம் செலுத்த வேண்டிய தொகை, கடைசி நாள் உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே நுகர்வோர்  தங்களது கைப்பேசி எண்ணை அந்தந்த பகுதிகளில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் பதிவு செய்து பயனடைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai