Enable Javscript for better performance
வாகனம் மோதி ஒருவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீவில்லிபுத்தூரில் வாகனம் மோதியதில் புதன்கிழமை ஒருவர் உயிரிழந்தார்.

      வ. புதுப்பட்டி, செக்கடி தெருவைச் சேர்ந்தவர் சி. கோவிந்தன் (51). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன்கோயில் பூக்குழி உற்சவத்தையொட்டி, புதன்கிழமை கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு வெளியே நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது ஆர்.சி. சர்ச் சந்திப்பிலிருந்து ராமகிருஷ்ணாபுரம் நோக்கி, மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வாகனம் கோவிந்தன் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai