Enable Javscript for better performance
விருதுநகர் பகுதிகளில் வைகோ தீவிர பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    விருதுநகர் பகுதியில் 3ஆவது நாளாக தேசிய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரும், மதிமுகவின் பொதுச் செயலருமான வைகோ புதன்கிழமை தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

         தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளரும், மதிமுக பொதுச் செயலருமான வைகோ தனது ஆதரவாளர்களுடன் ஒவ்வொரு கிராமமாக சென்று தனக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

        அதில், உசிலம்பட்டியில் வைகோ திறந்த வேனில் பிரசாரம் செய்து பேசியதாவது: நான் மக்களவை தொகுதி உறுப்பினராக இருந்த போது பொதுமக்களுக்கு பல்வேறு வகையான நலத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன்.

         அதிக விலையுள்ள மஞ்சள் காமாலை தடுப்பூசி, மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை ஆகியவைகள் மேற்கொண்டுள்ளேன். தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறேன்.

        பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்று நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் ஆட்சி அமையும். மது ஒழிப்பு பற்றி பொதுமக்களிடையே எடுத்து கூறுவதற்காக நடைபயணம் மேற்கொண்டேன். அப்போது, கிராமங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் நல்ல வரவேற்பளித்தனர். அதேபோல், என்னை மக்களவை தொகுதி உறுப்பினராக தேர்வு செய்ய ஆதரவு அளியுங்கள்.  உங்களுக்காகவே உண்மையாகவும், நேர்மையான முறையிலும் மக்களவையில் பணியாற்றுவேன் எனக் கூறினார்.   இதேபோல், சிவஞானபுரம், நந்திரெட்டியபட்டி, சியாபட்டி, வடமலைக்குறிச்சி,  சத்திரரெட்டியபட்டி, உசிலம்பட்டி, புல்லலக்கோட்டை, பெரிய பேராலி, ரோசல்பட்டி, பாண்டியன் நகர் உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் செய்தார்.      இப்பிரசாரத்தின் போது உடன் பா.ஜ.க, தேமுதிக மற்றும் மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai