Enable Javscript for better performance
விளையாட்டுப் போட்டி: கலசலிங்கம் கல்வியியல் கல்லூரி வெற்றி- Dinamani

சுடச்சுட

    

    விளையாட்டுப் போட்டி: கலசலிங்கம் கல்வியியல் கல்லூரி வெற்றி

    By dn  |   Published on : 27th March 2014 02:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாவட்ட அளவில் கல்வியியல் கல்லூரி மாணவ- மாணவியருக்கு நடைபெற்ற விளையாட்டு மற்றும் கலைப் போட்டியில் கிருஷ்ணன்கோயில், கலசலிங்கம் கல்வியியல் கல்லூரி மாணவ- மாணவியர் வெற்றி பெற்று பல்கலைக்கழக சான்றிதழைப் பெற்றனர்.

      போட்டிகள் விருதுநகர் ஸ்ரீவித்யா கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றன. போட்டியில் இக்கல்லூரியின் எம். பெய்ஷ்லா மேகிள் இசைப் போட்டியில் 2ஆம் இடம் பெற்றார். 100 மீ மற்றும் 200 மீ ஓட்டப் போட்டியில் ஆர். அனுஷியாதேவி 2ஆம் இடம் பெற்றார். மேலும் பல்வேறு போட்டிகளில் கிடைத்த புள்ளிகளின் அடிப்படையில் கலசலிங்கம் கல்வியியல் கல்லூரிக்கு தனிநபர் சாம்பியன் பட்டம் கிடைத்தது.

    வெற்றி பெற்ற மாணவ- மாணவியரை கல்லூரியின் தலைவர் தி. கலசலிங்கம், செயலர் கே. ஸ்ரீதரன், தனி அலுவலர் லட்சுமணன் உள்ளிட்டோர் பாராட்டினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai