Enable Javscript for better performance
இளம்பெண்ணை பலாத்காரம் செய்த இளைஞர் உள்பட 6 பேர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    இளம்பெண்ணை பலாத்காரம் செய்த இளைஞர் உள்பட 6 பேர் மீது வழக்கு

    By காரியாபட்டி  |   Published on : 17th April 2015 01:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மல்லாங்கிணறில் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

      மல்லாங்கிணறு அருகிலுள்ள முடியனூரைச் சேர்ந்த முருகன் மகன் பாண்டியராஜ்(25).  இவரும், மல்லாங்கிணறு வேல்ச்சாமி மகள் முருகேஸ்வரி(25)யும், கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி முருகேஸ்வரியை பாண்டியராஜ் பாலியல் பலாத்காரம் செய்தாராம். திடீரென பாண்டியராஜ் திருமணத்துக்க மறுத்து விட்டாராம்.

    அப்பெண்ணை பாண்டியராஜ் திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தி, அவரது       உறவினர்கள் புதன்கிழமை மாலையில் மல்லாங்கிணறில் சாலை மறியலில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதியளித்ததைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. முருகேஸ்வரி புகாரின் பேரில் பாண்டியராஜ், அவருக்கு உடந்தையாக இருந்த முருகன், பரமேஸ்வரி, செல்வி, பால்பாண்டி, விஜி ஆகிய 6 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai