Enable Javscript for better performance
ராஜபாளையத்தில் 44 மி.மீ. மழை- Dinamani

சுடச்சுட

    

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் புதன்கிழமை அதிகபட்சமாக 44 மி.மீ. மழை பெய்துள்ளது.

     மாவட்டத்தின் பிற பகுதிகளில் அதே நாள் பெய்துள்ள மழை அளவு வருமாறு: சாத்தூரில் 39 மி.மீ., சிவகாசியில் 2.8.மி.மீ.,வெம்பக்கோட்டை அணைப் பகுதியில் 18 மி.மீ., ஸ்ரீவில்லிபுத்தூரில் 7 மி.மீ., பிளவக்கல் அணைப் பகுதியில் 3 மி.மீ., கோவிலாறு பகுதியில் 5 மி.மீ. மழை பெய்துள்ளது.

    சிவகாசி கோயிலில் பக்தர்கள் தங்கத்தேர் இழுப்பது எப்போது?

    சிவகாசி, ஏப். 16: சிவகாசி விஸ்வநாதர்-விசாலாட்சியம்மன் கோயில் தங்கத் தேர் வெள்ளேட்டம் விடப்பட்டும் பயன்பாட்டிற்கு வராததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

      சிவகாசி விஸ்வநாதர்-விசாலாட்சியம்மன் கோயிலில் தங்கத்தேர் வேண்டும் என பக்தர்கள் நீண்டநாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து சிவகாசி தொழிலதிபர் ஏ.எஸ்.ராஜப்பனை தலைவராக் கொண்ட தெய்வீகப் பேரவை சார்பில் பல லட்சம் ரூபாய் செலவில் தங்கத்தேர் செய்யப்பட்டுள்ளது. இந்த தேர் ஏப்ரல் 3-ஆம் தேதி வெள்ளோட்டம் விடப்பட்டதோடு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் வைக்கப்பட்டுள்ளது.

      ஏராளமான பக்தர்கள் பிறந்தநாள், திருமணநாள் போன்ற நாள்களில் தங்கத்தேர் இழுக்க வேண்டுகோள் விடுத்தனர். இதற்கு அதிகாரிகள் அனுமதியளிக்கவில்லை.

      இது குறித்து கோயில் நிர்வாகத் தரப்பில் கூறுகையில்,  தங்கத்தேர் செய்யும் பணி முடிவடைந்து வெள்ளோட்டம் விட்பட்டுள்ளது. எனினும் தேர் செய்ததற்கான பில், ரசீது கோயிலில் ஒப்படைக்கப்படவில்லை. அவை கோயில் நிர்வாகத்திற்கு வந்த பிறகு தான், பக்தர்கள் தங்கத்தேர் இழுக்க அனுமதிக்கப்படும், எனத் தெரிவிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai