Enable Javscript for better performance
வட்டார வள மைய ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் வட்டார வளமைய ஆசிரியர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

     விருதுநகர் வட்டார வளமைய அலுவலகம் முன்பு நடந்த ஆப்பாட்டத்திற்கு    அனைத்து வட்டார வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாவட்டச் செயலாளர் குமார் தலைமை வகித்தார்.

     சங்கத் தலைவர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாநிலப் பொருளாளர் வேல்முருகன் விளக்கவுரை நிகழ்த்தினார்.

    இதில் உயர்நீதி மன்றக்கிளை உத்தரவின் படி 885 வட்டார வள மைய பட்டதாரி ஆசிரியர்களை, பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக இடமாற்றம் செய்யவும், ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றினால் மாற்றம் செய்ய வேண்டும் என்ற அரசு உத்தரவை ரத்து செய்தல் மற்றும் தற்போதைய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத்தில் பல்வேறு வட்டார வள மையங்களில் இருந்து வட்டார வள மைய ஆசிரியைகள்,      ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai