Enable Javscript for better performance
வருவாய்த்துறை சான்றுகளை இ-சேவை மூலம் மாணவர்கள் எளிதாகப் பெற ஏற்பாடு: ஆட்சியர்- Dinamani

சுடச்சுட

    

    வருவாய்த்துறை சான்றுகளை இ-சேவை மூலம் மாணவர்கள் எளிதாகப் பெற ஏற்பாடு: ஆட்சியர்

    By விருதுநகர்  |   Published on : 17th April 2015 01:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் மாவட்டத்தில் வருவாய்த் துறை மூலமாக வழங்கப்படும் சான்றுகளை, பொது இ-சேவை மையங்களில் விண்ணப்பித்து மாணவ, மாணவியர் எளிதாக பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, ஆட்சியர் வே.ராஜாராமன் தெரிவித்துள்ளார்.

      இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பது: ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகங்கள், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், நிலவள வங்கிகள், வறுமை ஒழிப்பு சங்க மையங்களில் பொது இ-சேவை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில், மாணவ, மாணவிகளுக்கான ஜாதி, வருமானம், இருப்பிடம், பிறப்பு சான்றுகள் உள்ளிட்டவை மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண் ஆகியோருக்கான பல்வேறு சான்றுகளை விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.  பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் அடுத்த மாதம் வெளியிடப்பட உள்ளன. இம்மாணவர்கள் உயர் கல்வியில் சேர்வதற்கு ஜாதி, வருவாய் மற்றும் பிறப்பு சான்றிதழ்கள் தேவைப்படும். தேர்வு முடிவுகள் வெளியானவுடன், அனைத்து மாணவ, மாணவியரும் ஒரே நேரத்தில் விண்ணப்பிக்க வரும்போது, கூட்ட நெரிசல் ஏற்படும். இதைத் தவிர்க்கும் வகையில், சான்றுகள் கோரி விண்ணப்பங்களை முன்னதாகவே அனுப்பிப் பெற்றுக் கொள்ள மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

      இது தவிர, வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க, நீக்கம் செய்ய மற்றும் வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளுதல் உள்ளிட்டவைகளுக்கான       படிவங்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாலும், வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பெறப்பட்டு வருகின்றன. மேற்படி விண்ணப்பங்களை, கணினி வாயிலாக நேரடியாக இணையதளத்தில் பதிவு செய்ய விரும்பினால், தமிழ்நாடு கேபிள் டி.வி. நிறுவனம் மூலம் வட்டாட்சியர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள பொது  இ-சேவை மையங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்களை ரூ.10 கட்டணம் செலுத்தி, பொதுமக்கள் பதிவு செய்து கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai