Enable Javscript for better performance
விருதுநகர்: சத்துணவு ஊழியர்கள் 6 இடங்களில் உண்ணாவிரதம்- Dinamani

சுடச்சுட

    

    விருதுநகர்: சத்துணவு ஊழியர்கள் 6 இடங்களில் உண்ணாவிரதம்

    By விருதுநகர்  |   Published on : 17th April 2015 01:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காலமுறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் விருதுநகர் மாவட்டத்தில் 6 இடங்களில் வியாழக்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

    சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குதல், சட்ட விதிமுறைப்படி ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை முதல் சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் 1,450 சத்துணவு கூடங்களில் பணியாற்றும் சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் இரண்டாவது நாளான வியாழக்கிழமை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

      விருதுநகர் ஆட்சியர் அலுவலக வளாகம் முன்புறம் நடந்த உண்ணாவிரதத்துக்கு மாவட்டப் பொருளாளர் பாத்திமாமேரி தலைமை வகித்தார். அரசு அலுவலர்கள் சங்க மாவட்டச் செயலாளர் எம்.சுப்பிரமணியன் மற்றும் மாநிலச் செயலாளர் கண்ணன் ஆகியோர் போராட்டம் குறித்து விளக்கிப் பேசினர்.

     நூற்றுக்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.

    ராஜபாளையம்: ராஜபாளையம் வட்டப்பகுதியில் பணிபுரியும் சத்துணவு ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சங்க நிர்வாகிகள் சிவசுப்பிரமணி,தமிழரசி தலைமையில் கருப்பையா, ராஜாமணி ஆகியோர் முன்னிலையில் உண்ணாவிரதம் வியாழக்கிழமை நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் பங்கேற்றனர்.

    இதேபோன்று, வெம்பக்கோட்டையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பும், ஸ்ரீவில்லிபுத்தூரில் தேரடி வீதியிலும், காரியாபட்டி மற்றும் திருச்சுழியில் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பும் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

    அதேசமயம், மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் சத்துணவு மையங்கள் மாற்று ஊழியர்கள் மூலம் இயங்கின. இங்கு வழக்கம் போல் சத்துணவு தயாரிக்கப்பட்டு, மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai