Enable Javscript for better performance
விருதுநகர் பகுதியில்  ஏப்ரல் 18 மின்தடை- Dinamani

சுடச்சுட

    

    விருதுநகர் துணை மின்நிலையத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது.

    எனவே, அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, விருதுநகர் நகர் மற்றும்  புறநகர் பகுதிகளான குல்லூர்ச்சந்தை, வடமலைக்குறிச்சி, பெரியவள்ளிக்குளம், மல்லாங்கிணர், பேராலி, பாவாலி, ஆமத்தூர், சத்திரரெட்டியாபட்டி ஆகிய கிராமங்களில் மின்தடை ஏற்படும் என செயற்பொறியாளர் திருப்பதி தெரிவித்துள்ளார்.

    அருப்புக்கோட்டையில்

    அருப்புக்கோட்டை, ஏப். 16:அருப்புக்கோட்டை உபமின் நிலையத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது.

    எனவே, அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை, அருப்புக்கோட்டை, காந்தி நகர், பந்தல்குடி, பாளையம்பட்டி, கல்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரிய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai