Enable Javscript for better performance
விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவி: அமைச்சர் உள்ளிட்ட 10 பேர் மனுதாக்கல்- Dinamani

சுடச்சுட

    

    விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவி: அமைச்சர் உள்ளிட்ட 10 பேர் மனுதாக்கல்

    By விருதுநகர்  |   Published on : 17th April 2015 01:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவிக்கு அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 10 பேர் கட்சித் தேர்தல் பொறுப்பாளர்களிடம் வியாழக்கிழமை மனுதாக்கல் செய்தனர்.

    மாவட்ட அதிமுக செயலாளர், மாவட்ட அவைத் தலைவர், மாவட்ட இணைச்செயலாளர், பொருளாளர் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் விருதுநகரில் புதன்கிழமை தொடங்கியது. மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களான மதுசூதனன், கிருஷ்ணகிரி சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன் உள்ளிட்ட 5 பேர் போட்டியிடுபவர்களிடம் மனுக்களைப் பெற்றனர்.

    மாவட்டச் செயலாளர் பதவிக்கு, தற்போதைய மாவட்டச் செயலாளரும், செய்தி மற்றும் செயலாக்கத்திட்ட அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி, முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், சிவகாசி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பாலகங்காதரன், முன்னாள் மாவட்டச் செயலாளர் சிவசாமி, சீனிவாசன் உள்பட 10பேர் வியாழக்கிழமை மனுதாக்கல் செய்தனர்.

    மாவட்ட அவைத்தலைவர் பதவிக்கு தற்போது அவைத்தலைவரான ஐ.மருது உள்ளிட்ட 4 பேரும், பொதுக்குழு உறுப்பினருக்கு தற்போதைய பொதுக்குழு உறுப்பினரான வழக்குரைஞர் விஜயகுமார், காரியாபட்டி பழனி, அருப்புக்கோட்டை விஜயலட்சுமி உள்பட 16 பேரும், மாவட்ட இணைச்செயலாளர் பதவிக்கு சிலம்பு மாரியம்மாள் உள்பட 3 பேரும் ஆக மொத்தமாக 39 பேர் மனுதாக்கல் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai