Enable Javscript for better performance
விருதுநகர்: 60 ஊராட்சிகளை சுகாதாரமாக்க 760 தூய்மைத் தொண்டர்கள் விரைவில் நியமனம்- Dinamani

சுடச்சுட

    

    விருதுநகர்: 60 ஊராட்சிகளை சுகாதாரமாக்க 760 தூய்மைத் தொண்டர்கள் விரைவில் நியமனம்

    By விருதுநகர்  |   Published on : 17th April 2015 01:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் மாவட்டத்தில் 60 கிராம ஊராட்சிகளை சுகாதாரமாக மாற்றுவதற்காக, குப்பைகள் அகற்றும் பணிக்கு 760 தூய்மைத் தொண்டர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

    இது தொடர்பாக ஊரக வளர்ச்சித்துறை முகமைத் திட்ட அலுவலர் எம். பிரபாகர் தினமணி செய்தியாளரிடம் கூறியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ்  60 கிராம ஊராட்சிகளில் தூய்மைத்திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இப்பணிக்கு மேற்கண்ட ஒவ்வொரு ஊராட்சியிலும் தலா 150 குடும்பங்களுக்கு ஒரு தூய்மை தொண்டர் என்கிற அடிப்படையில் 760 பேர் நியமனம் செய்யப்படவுள்ளனர். இவர்களுக்கு தினமும் ரூ.183 வீதம் கூலியாக  100 நாள்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மூலம் வழங்கப்படும். அதையடுத்து, தூய்மைப் பாரத இயக்கத்திட்டம் மூலம் இந்தக்கூலி வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதற்காக தேர்வு செய்யப்படும் ஊராட்சிகளுக்கு திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் மூலம் மூன்று சக்கர வாகனம், பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்காக நறுக்கும் இயந்திரங்கள், சுத்தம் செய்வதற்கான உபகரணங்கள், தூய்மைத் தொண்டர்களுக்கு மேல்சட்டை, கையுறைகள், அடையாள அட்டை, தொப்பி ஆகியவை வழங்கப்படும். இது தொடர்பாக ஊராட்சித் தலைவர்கள், கிராம வறுமை ஒழிப்புச்சங்கம், மகளிர் குழு கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட இருப்பதாக, அவர் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai