Enable Javscript for better performance
வீடு புகுந்து நகை திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    திருத்தங்கலில் வீடு புகுந்து நகை திருடப்பட்டுள்ளதாக புதன்கிழமை போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

     திருத்தங்கல் கே.கே. நகரைச் சேர்ந்தவர் தேவகிருபாகரன். இவரது மனைவி மாரீஸ்வரி(24). இவர் திருத்தங்கலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். இவர் புதன்கிழமை வேலைக்கு சென்றபோது, வழக்கம் போல சாவியை ஜன்னலில் வைத்து விட்டுச் சென்றாராம்.

     பிற்பகலில் மதிய உணவிற்கு அவர் வந்தபோது, வீடு திறக்கப்பட்டிருந்துள்ளது. பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த இரண்டரைப் பவுன் தங்கநகை திருடப்பட்டிருந்ததாம்.

      இது குறித்து திருத்தங்கல் போலீஸாரிடம் புதன்கிழமை புகார் செய்யப்பட்டுள்ளது.

     இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai