Enable Javscript for better performance
ஆடு திருடியவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வி.முத்துலிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ச.திருப்பதி. இவர் வயலில் தனது இரு ஆடுகளை மேய்ச்சலுக்காக கட்டிப்போட்டிருந்துள்ளார். இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் ஒரு ஆட்டை திருடிக் கொண்டு தப்பி ஓடிவிட்டார்களாம். இது குறித்து கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் திருப்பதி புகார் செய்தார். சார்பு ஆய்வாளர் வேலாயுதம் வழக்குப் பதிவு செய்து சிவந்தியாபுரத்தைச் சேர்ந்த க.தங்கராஜ் (23) என்பவரைக் கைது செய்து ஆட்டைப் பறிமுதல் செய்தனர். மேலும் இவருடன் திருட்டில் ஈடுபட்ட இதே இடத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai