Enable Javscript for better performance
ஸ்ரீவிலி. பள்ளிகளில் குடியரசு தின விழா- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீவிலி. பள்ளிகளில் குடியரசு தின விழா

    By ஸ்ரீவில்லிபுத்தூர்,  |   Published on : 27th January 2015 12:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நரையன்குளம் ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குடியரசு நாள் விழா உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சி.பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் ஆ.காமராஜ் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை இ.ஜெஸிந்தா வரவேற்றார்.

    சிவகாசி காவல் துணைக் கண்காணிப்பாளர் அ.சி.வெள்ளையன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மாணவ மாணவியரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

    ஆசிரியை ந.ரெங்கலதா நன்றி கூறினார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி, தமிழ் வழி தொடக்கப் பள்ளி மற்றும் லயன்ஸ் இண்டர் நேஷனல் பள்ளி ஆகியவற்ற்றில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தாளாளர் எஸ்.ஆர்.முருகராஜன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மாணவ மாணவியரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் அரிமா சங்கத் தலைவர் கு.சக்திவேல், பொருளாளர் கார்த்திக் உள்ளிட்ட அரிமா சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    கிருஷ்ணன்கோவில், அரசு மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா தலைமை ஆசிரியை பூ.அருணா தலைமையில், உதவித் தலைமை ஆசிரியர் வீ.வீரபாண்டியராஜ் முன்னிலையில் நடைபெற்றது. கணினி ஆசிரியர் ப.சரவணன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தமிழ் ஆசிரியை வி.விசாலாட்சி குடியரசு நாள் விழா சிறப்புரையாற்றினார். ஆசிரியை பி.மஞ்சுளா நன்றி கூறினார்.

    சுந்தரபாண்டியம்: சுந்தரபாண்டியம், அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் குருவையா தலைமையில், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கலசலிங்கம் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

    அப்பையநாயக்கர்பட்டியில் உள்ள ஸ்ரீமயூரா இண்டர் நேஷனல் பள்ளியில் தாளாளர் முத்தையா தேசிய கொடியை ஏற்றி வைத்து மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர் கிராம மக்கள் கலந்து கொண்டனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    சி.எம்.எஸ். மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் ஜி.எட்வின் கனகராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

    வள்ளுவர் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் நிர்வாக அலுவலர் சங்கரநாராயணன் முன்னிலையில் பள்ளி தலைவர் கொ.சிவக்குமார் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் தாளாளர் ரேணுகா கலந்து கொண்டார்.

    மகாத்மா வித்யாலயாவில் குடியரசு நாள் விழா முதல்வர் எம்.ராணி தலைமையில் நடைபெற்றது. ஆசிரியை நர்மதா வரவேற்றார். தாளாளர் ஜி.எஸ்.முருகேசன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

    விழாவில் ஜே.சி.ஐ. தலைவர் பி.பாலமுருகன், முன்னாள் தலைவர் ராஜேஸ்கண்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆசிரியை முனீஸ்வரி நன்றி கூறினார்.

    சத்யா வித்யாலயா: ஸ்ரீவில்லிபுத்தூர்-பிள்ளையார்குளத்தில் உள்ள சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. முதல்வர் பி.முருகதாசன் வரவேற்றார். தாளாளர் சி.குமரேசன், தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

    ஆசிரியை எஸ்.தேவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மாணவ மாணவியர் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். ஆசிரியைகள் தெய்வானை, ரேவதி ஆகியோர் சிறப்புரையாற்றினார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் அமுதா செய்திருந்தார். ஆசிரியை மீனாட்சி நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai