Enable Javscript for better performance
ஆலங்குளத்தில் திமுக ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    விருதுநகர் மாவட்டம், ஆலங்குளத்தில் உள்ள அரசு சிமென்ட் ஆலையை தொடர்ந்து இயக்கவும், ஆலையை நவீனப்படுத்தவும் கோரி, வெம்பக்கோட்டை ஒன்றிய திமுக சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    ஆலங்குளம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, ஒன்றியச் செயலர் கனிராஜ் தலைமை வகித்தார். கட்சியின் மாவட்டச் செயலர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர், திமுக ஆட்சிக் காலத்தில் இந்த ஆலையை நவீனப்படுத்த ரூ. 85 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து, ஆலையை நவீனப்படுத்த இந்த நிதி போதாது எனக் கூறி, ரூ.165 கோடி மதிப்பீடு செய்யப்பட்டது. ஆனால், அந்த நிதியை அதிமுக அரசு இதுவரை ஒதுக்கீடு செய்யவில்லை. தொழிலாளர்கள் நலனைக் கருத்தில்கொண்டு, இந்த ஆலையை நவீனப்படுத்த வேண்டும் என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai