Enable Javscript for better performance
கலசலிங்கம் பல்கலை.யில் பி.டெக். சேர்க்கைக்கு விண்ணப்ப விநியோகம் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    கலசலிங்கம் பல்கலை.யில் பி.டெக். சேர்க்கைக்கு விண்ணப்ப விநியோகம் தொடக்கம்

    By ஸ்ரீவில்லிபுத்தூர்,  |   Published on : 28th January 2015 12:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 2015-16ஆம் கல்வியாண்டுக்கான பி.டெக். மாணவர் சேர்க்கைக்குரிய விண்ணப்ப விநியோகம் தொடக்க விழா, பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

      முன்னதாக, பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஆனந்த விநாயகர் சன்னதியில் விண்ணப்பங்களை வைத்து விசேஷ பூஜைகள் செய்யப்பட்டன.

     பி.டெக். முதல் விண்ணப்பத்தை, மாணவர் ஒருவருக்கு வழங்கி வேந்தர் க. ஸ்ரீதரன் விநியோகத்தைத் தொடங்கி வைத்தார்.

      நிகழ்ச்சியில், துணைவேந்தர் ச. சரவணசங்கர், பதிவாளர் வெ. வாசுதேவன், வேந்தரின் தனிச் செயலர் முரளிகிருஷ்ணா, நிதி காப்பாளர் இளமாறன், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

      இதில், இந்தியா முழுவதும் உள்ள 19 மாணவர் சேர்க்கை மையங்களுக்கும் விண்ணப்பப் படிவம் அனுப்பி வைக்கப்பட்டு, விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது என்று வேந்தர் கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai