Enable Javscript for better performance
சாத்தூர் அருகே மர்மக் காய்ச்சலுக்கு சிறுமி சாவு- Dinamani

சுடச்சுட

    

    சாத்தூர் அருகே மர்மக் காய்ச்சலுக்கு சிறுமி சாவு

    By சாத்தூர்  |   Published on : 28th January 2015 12:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாத்தூர், ஜன. 27: சாத்தூர் அருகே மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார்.

       விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்தவர் கருப்பசாமி, கூலி தொழிலாளி. இவரது மகள் பாப்பாத்தியம்மாள் (7). (படம்) இங்குள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.   சில நாள்களுக்கு முன் பாப்பாத்தியம்மாள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, ஏழாயிரம்பண்ணை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். பின்னர், மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், திங்கள்கிழமை பாப்பாத்தியம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.   சில மாதத்துக்கு முன், இதே பகுதியில் மர்மக் காய்ச்சலால் ஒரு குழந்தை உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.   இப்பகுதியில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai