Enable Javscript for better performance
சாத்தூர் நகர்மன்றக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    சாத்தூர், ஜன. 27: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் நகர்மன்றக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    நகர்மன்றத் தலைவர் டெய்சிராணி தலைமை வகித்தார். பொறியாளர் மணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், தனது வார்டில் கொசுத் தொல்லை அதிகமாக இருப்பதாகவும், பிளாஸ்டிக் பொருள்களை தடை செய்யவேண்டும் எனவும், உறுப்பினர் பூமாரிமுத்து கேட்டுக் கொண்டார். இதற்கு, கொசுவை அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தாமல் தடுக்க விழிப்புணர்வு முகாம் நடத்தப்படும் என பொறியாளர் பதிலளித்தார்.

    அதேநேரத்தில், நான்குவழிச் சாலையின் குறுக்கே பாலம் அமைப்பது குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தலைவர் பதிலளித்தார். பின்னர், உறுப்பினர் முனீஸ், 16ஆவது வார்டின் பின்புறம் சாக்கடை அதிகமாக உள்ளது. இதை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

    தனது வார்டில் உள்ள தில்லை நகர், பி.டி.ஓ. காலனி ஆகிய இரு பகுதிகளிலும் சாலை வசதி செய்து தரவேண்டும் என உறுப்பினர் சாந்தி கேட்டுக் கொண்டார்.  எத்தல் ஹார்வி பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே செல்லும் ஓடையை சுத்தம் செய்யவேண்டும் என உறுப்பினர் கலாவதி கேட்டுக் கொண்டார். உறுப்பினர்கள் இந்த அனைத்து கோரிக்கைகளையும் விரைவில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தலைவர் மற்றும் பொறியாளர் தெரிவித்தனர்.

    இந்தக் கூட்டத்தில், நகராட்சிப் பொறியாளர், நகரமைப்பு அலுவலர், சுகாதார துறை அலுவலர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும் இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai