Enable Javscript for better performance
சிவகாசி அரிமா பள்ளி விளையாட்டு விழா- Dinamani

சுடச்சுட

    

    சிவகாசி, ஜன. 27:    சிவகாசி தொழில் நகர் அரிமா சங்கம் சார்பில் செயல்பட்டு வரும் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு விழா நடைபெற்றது.

      நிகழ்ச்சிக்கு, பள்ளித் தாளாளர் வி.கே. வேல்ராஜன் தலைமை வகித்தார். சங்கத் தலைவர் என். இளங்கோவன் வரவேற்றார். தேசியக் கொடியை தொழிலதிபர் வி. ஜெய்வராஜ் ஏற்றினார். ஒலிம்பிக் கொடியை வேல்ராஜன் ஏற்றினார். பள்ளிக் கொடியை ராஜபுஷ்பம் ஏற்றினார். தெய்வராஜ், ஒலிம்பிக் தீபத்தை ஏற்றிவைத்து போட்டியை தொடக்கி வைத்தார்.    இதில், ஓட்டப் பந்தயம், தடைதாண்டும் போட்டி, குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. சிலம்பம், யோகா, கராத்தே உள்ளிட்டவையும் நடைபெற்றன.   போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தொழில் நகர் அரிமா சங்க உறுப்பினர்கள் பரிசு வழங்கினர். முதல்வர் பி. காளீஸ்வரன் நன்றி கூறினார். ஏற்பாட்டினை, உடற்கல்வித் துறை ஆசிரியர் செய்திருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai