Enable Javscript for better performance
சுற்றுச்சூழல் விருது பெற தனிநபர்,  தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு- Dinamani

சுடச்சுட

    

    சுற்றுச்சூழல் விருது பெற தனிநபர்,  தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

    By விருதுநகர்  |   Published on : 28th January 2015 12:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சுற்றுச்சூழல் விருது பெற, தனிநபர் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

      இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் சுற்றுச்சூழல் கல்வி விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டு சிறப்பாக பணியாற்றி வரும் கல்வி மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், தனிநபர் ஆகியோருக்கு, சுற்றுச்சூழல் விருதை அரசு வழங்கி வருகிறது.

      அதேபோல், 2014ஆம் ஆண்டுக்கான விருது பெற குறிப்பிட்ட தகுதிகளை பெற்றிருக்க வேண்டும். இவ்விருதுக்கு விண்ணப்பிக்கும் தனிநபராக இருந்தால் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். கடந்த 3 ஆண்டுகளில் தனிநபர், நிறுவனம் செய்த பணிகள் இடம்பெற்றிருக்க வேண்டும்.   தனிநபர் எந்த நிறுவனத்திலும் பணிபுரிபவராக இருக்காமலும், ஆனால் ஓய்வுபெற்ற பின் தனிநபர் சுற்றுச்சூழல் விழிப்புணர்வில் ஈடுபட்டிருந்தால் விண்ணப்பிக்க தகுதியுடையவர்.    குறிப்பிட்ட கால இடைவெளியில் மேற்கொண்ட களப்பணி மற்றும் அதைச் சார்ந்த பிரசுரங்கள், பத்திரிகை குறிப்புகள், திட்ட அறிக்கைகள், அதனால் ஏற்பட்ட பயன்பாடு, பயனாளிகள், பங்குபெற்றோரின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் இடம் பெறுவது அவசியம். குறிப்பிட்ட 3 பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பவேண்டும். ஏற்கெனவே, சுற்றுச்சூழல் விருது பெற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கக் கூடாது.   

      இதேபோல், சிறந்த ஆராய்ச்சி கட்டுரைகளை ஊக்குவிக்கும் வண்ணம், தனிநபர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்டோர் உருவாக்கிய சிறந்த ஆராய்ச்சி கட்டுரைகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கட்டுரைகள், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் தரமான ஆராய்ச்சி ஏடுகளில் பிரசுரம் செய்திருக்க வேண்டும். ஆங்கில கட்டுரை என்றால் கட்டாயம் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டிருக்க வேண்டும். இதற்கு, ஆதாரமாக எந்த ஆராய்ச்சி ஏடுகளில் பிரசுரம் செய்யப்பட்டது என்ற விவரத்தையும் அளிக்கவேண்டும்.

      இதற்கான விண்ணப்பங்கள் வரும் பிப்ரவரி 2ஆம் தேதியிலிருந்து 25ஆம் தேதி வரையில், இந்த அலுவலக இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 3 புகைப்படங்களுடன், ரூ.100 கேட்பு காசோலையுடன் இயக்குநர், சுற்றுச்சூழல் துறை, தரை தளம், பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை-600015 என்ற முகவரிக்கு, வரும் 27ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai