Enable Javscript for better performance
தாமரைக்கனி மகன் மீது வழக்கு:  மற்றொரு மகன் புகார்- Dinamani

சுடச்சுட

    

    தாமரைக்கனி மகன் மீது வழக்கு:  மற்றொரு மகன் புகார்

    By ஸ்ரீவில்லிபுத்தூர்  |   Published on : 28th January 2015 12:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஸ்ரீவில்லிபுத்தூர், ஜன. 27: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் அ.தி.மு.க.வில் உள்ள தாமரைக்கனியின் ஒரு மகன், தி.மு.க.வில் உள்ள தனது சகோதரர் மீது தன்னை தாக்கியதாக, காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

      ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் 5 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், நகர்மன்றத் தலைவராகவும் பதவி வகித்தவர் தாமரைக்கனி. இவரது மகன் வழக்குரைஞர் ஆணழகன் (38), அதிமுக மாவட்ட வழக்குரைஞர் பிரிவில் உள்ளார்.

      இவரது உடன்பிறந்த தம்பி தங்கமாங்கனி திமுக மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளராக உள்ளார். இருவருக்கும் பூர்வீக சொத்து தொடர்பாகவும், அரசியல் ரீதியாகவும் முன்விரோதம் இருந்து வருகிறது.

      இந்நிலையில், திங்கள்கிழமை ஆணழகன் தனது தாய் தேவகி மற்றும் குடும்பத்தாருடன் பாபநாசம் சென்றுவிட்டு இரவு வீட்டுக்குத் திரும்பினாராம். அப்போது வீட்டிலிருந்த தங்கமாங்கனி, ஆணழகனைப் பார்த்து ஆபாசமாகப் பேசினாராம். மேலும், அவரை முட்டி கீழே தள்ளினாராம். பின்னர், கம்பியால் தாக்க முயன்றாராம். அப்போது, அருகிலிருந்த ஆணழகனின் மனைவி சாரதாமணி தடுத்தாராம்.

      இது குறித்து ஆணழகன், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீஸார் தங்கமாங்கனி மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai