Enable Javscript for better performance
பள்ளியில் குடியரசு தின விழா- Dinamani

சுடச்சுட

    

    சிவகாசி, ஜன. 27:    சிவகாசி காமராஜ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

    விழாவுக்கு, தாளாளர் ரமேஷ்குமார் தலைமை வகித்தார். பொருளாளர் ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றினார்.    தொடர்ந்து, பேச்சுப் போட்டி உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. துணை முதல்வர் மணிமாலா நன்றி கூறினார்.

    ஏற்பாட்டினை, முதல்வர் சல்வத்தி இல்யாஸ் செய்திருந்தார். சபையர் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், தாளாளர் ஏ. ஞானசேகரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். 

    பின்னர், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. முதல்வர் செல்வகுமார் ஏற்பாட்டினை செய்திருந்தார்.

    சிவகாசி நகர காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற விழாவில், காந்தி சிலை, காமராஜர் சிலை, முத்துராமலிங்கத் தேவர் சிலை, அம்பேத்கர் சிலை ஆகியவற்றுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்டச் செயலர் முருகேசன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சேர்மத்துரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai