Enable Javscript for better performance
பள்ளியில் புதிய சமையல் அறை கட்டடம் திறப்பு விழா- Dinamani

சுடச்சுட

    

    பள்ளியில் புதிய சமையல் அறை கட்டடம் திறப்பு விழா

    By ஸ்ரீவில்லிபுத்தூர்  |   Published on : 28th January 2015 12:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஸ்ரீவில்லிபுத்தூர், ஜன. 27: ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம், கொங்கலாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ. 2.50 லட்சம் மதிப்பில் வைப்பறையுடன் கூடிய புதிய சமையல் அறை கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது.

    இந்த விழா, தலைமை ஆசிரியர் (பொறுப்பு) பெ. ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. இடைநிலை ஆசிரியை அருள் வரவேற்றார். டி.மானகசேரி ஊராட்சி மன்றத் தலைவர் வேலுச்சாமி, புதிய கட்டடத்தை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

    விழாவில், துணைத் தலைவர் சுபிதா மாயக்கிருஷ்ணன், பட்டதாரி ஆசிரியை சுப்புலட்சுமி, கருப்பசாமி, பாக்கியலட்சுமி, கிராம கல்விக் குழு உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். பட்டதாரி ஆசிரியர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai