Enable Javscript for better performance
பா.ம.க. நிர்வாகிகள் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ராஜபாளையம், ஜன. 27: ராஜபாளையத்தில் பா.ம.க. மேற்கு மாவட்ட நகர, ஒன்றியச் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

      இதில், மாநில துணைப் பொதுச் செயலர் பெ. லட்சுமணன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் பாலகிருஷ்ணன், மாவட்டச் செயலர் காளிதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராஜபாளையம் நகரத் தலைவர் ராமசுப்பிரமணியன் வரவேற்றார்.

      கூட்டத்தில், ராஜபாளையம் பகுதியில் டெங்கு காய்ச்சலுக்கு பலியானவர்களுக்கு அரசு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். ஆலங்குளம் அரசு சிமென்ட் ஆலையை அரசு தொடர்ந்து இயக்கவேண்டும்.

     கேபிள் டி.வி.க்கு அரசு நிர்ணயித்த ரூ.70 மட்டும் மாதக் கட்டணமாக வசூலிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

     மாவட்ட துணைச் செயலர் முத்தையா (எ) கோவிந்தராஜ் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai