Enable Javscript for better performance
மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் யானைகளுக்கு நீர்த் தொட்டிகள் அமைக்க ரூ.10 லட்சம் ஒதுக்கீடு- Dinamani

சுடச்சுட

    

    மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் யானைகளுக்கு நீர்த் தொட்டிகள் அமைக்க ரூ.10 லட்சம் ஒதுக்கீடு

    By DN  |   Published on : 28th January 2015 12:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோடை காலங்களில் யானைகளின் தாகம் தீர்க்கும் வகையில், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஆழ்குழாய் கிணறு வசதியுடன் தண்ணீர் தொட்டிகள் அமைக்க ரூ. 10 லட்சம் நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

       விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், தாணிப்பாறை, சேத்தூர் உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலையில் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகள் உள்ளன.

      இங்குள்ள மரங்கள் மற்றும் விலங்குகளையும் பாதுகாக்கும் வகையில் வனத் துறை மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

      அதனடிப்படையில், கோடை காலங்களில் தண்ணீருக்காக யானை, மான், முள்ளம் பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள், மலை அடிவாரப் பகுதியில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து விடும் சூழ்நிலை உள்ளது.

      குறிப்பாக, யானைகள் விளைபயிர்களையும், மரங்களையும் வேரோடு சாய்த்து நாசம் செய்து விடுகின்றன.

       இதனால், விவசாயிகள் பாதிப்படைந்து வருகின்றனர்.

      இதுபோன்று வனவிலங்குகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்கும் வகையில், குறிப்பிட்ட பகுதிகளில் யானைகள் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் தண்ணீர் தொட்டிகள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது. 

      எனவே, மலை அடிவாரப் பகுதியில் மின்மோட்டார் வசதியுடன் ஆழ்குழாய் கிணறு அமைத்து, 150 மீட்டர் இடைவெளியில் தலா ரூ. 5 லட்சத்தில் 2 தண்ணீர் தொட்டிகள் வனத்துறை மூலம் ஏற்படுத்தப்பட இருக்கிறது. இதற்காக, அரசு ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது.

      இது சம்பந்தமாக, மலை அடிவாரப் பகுதியில் வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக, வனக் கோட்ட அலுவலர் அசோக்குமார் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai