Enable Javscript for better performance
மோசடி புகார்: வழக்குரைஞர் உள்ளிட்ட மூவர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    மோசடி புகார்: வழக்குரைஞர் உள்ளிட்ட மூவர் மீது வழக்கு

    By ஸ்ரீவில்லிபுத்தூர்  |   Published on : 28th January 2015 12:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஸ்ரீவில்லிபுத்தூர், ஜன. 27: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மோசடியில் ஈடுபட்டதாக, வழக்குரைஞர் உள்ளிட்ட மூவர் மீது போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    திருநெல்வேலி மாவட்டம், சிவகிரி தாலுகா, ராமநாதபுரம்-திருமலாபுரத்தைச் சேர்ந்தவர் சி.ஜெயகணேஷ். இவருக்குச் சொந்தமான டிராக்டரை இதே இடத்தைச் சேர்ந்த சி. தங்கம் என்பவர் வாங்கியுள்ளார். டிராக்டர் 30.3.2003இல் கிழவிகுளம் அருகில் உள்ள ஆற்றில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

    இது குறித்த மோட்டார் வாகன விபத்து வழக்கு கோப்புக்கு எடுக்கப்பட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுள்ளது. பின்னர், இதே இடத்தைச் சேர்ந்த சண்முக நாயக்கர் மகன் முத்துச்சாமி (58) என்பவரை விபத்துக்குள்ளான டிராக்டரின் உரிமையாளர் போல் போலியான ஆவணங்கள் தயாரித்து, வழக்கில் 5ஆவது எதிர் மனுதாரராகச் சேர்த்துள்ளனர். இதன்படி, 18.9.2010இல் ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பு நீதிமன்றத்தில் முத்துச்சாமிக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக, 21.7.14ஆம் தேதி சங்கரன்கோவில் சார்பு நீதிமன்றத்தில் இருந்து முத்துச்சாமிக்கு சம்மன் வந்துள்ளது. அப்போதுதான், தனது பெயரில் ஜெயகணேஷ் மற்றும் தங்கம் ஆகியோர் போலியான ஆவணங்கள் தயாரித்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதை முத்துச்சாமி அறிந்துள்ளார்.

    இதையடுத்து, மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் முத்துச்சாமி, தன்னை டிராக்டர் உரிமையாளர் போல் போலியான ஆவணங்கள் தயாரித்து, தனக்கு எதிராக தீர்ப்பு பெற்றுள்ள ஜெயகணேஷ், தங்கம் ஆகியோர் மீதும், போலி ஆவணங்களை வைத்து நீதிமன்றத்தில் தனக்குத் தெரியாமல் ஆஜராகிய ஸ்ரீவில்லிபுத்தூர் வழக்குரைஞர் சாந்தகுமார் மீதும் புகார் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டது. அதன்பேரில், போலீஸார் ஜெயகணேஷ், தங்கம் மற்றும் வழக்குரைஞர் சாந்தகுமார் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai