Enable Javscript for better performance
விருதுநகரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    விருதுநகர், ஜன. 27: விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயனடையும் வகையில், வரும் 30ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது.

      இது தொடர்பாக, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராமநாதன் வெளியிட்டுள்ள  அறிவிப்பு: தமிழ்நாடு திறன் மேம்பாட்டு முகமையின் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரும் வகையில், விருதுநகர் சூலக்கரை அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், காலை 10.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2 மணி வரை இந்த முகாம் நடைபெறுகிறது.

    இம்முகாமில், தமிழகம் முழுவதும் உள்ள பிரபல தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, தங்களது நிறுவனங்களுக்குத் தேவையான பணியாளர்களைத் தேர்வு செய்யவுள்ளனர். அதனால், இம்மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயனடையலாம்.  

      இதில் தேர்வு செய்யப்படுகிறவர்களுக்கு, அன்றைய தினமே பணிக்கான உத்தரவும் அளிக்கப்பட இருக்கிறது.

    இந்த முகாம் மூலம் பணி நியமனம் பெற்றவர்களது பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது. எனவே, வேலைவாய்ப்பில்லாத இளைஞர்கள் இம்முகாமில் பங்கேற்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai