Enable Javscript for better performance
விருதுநகர் அருகே விபத்தில் தொழிலாளி சாவு- Dinamani

சுடச்சுட

    

    விருதுநகர், ஜன. 27: விருதுநகர் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில், சம்பவ இடத்திலேயே சுமை தூக்கும் தொழிலாளி உயிரிழந்தார்.

    விருதுநகர் அருகே மாத்தநாயக்கன்பட்டி சாலைப் பகுதியில் உள்ள அல்லம்பட்டியைச் சேர்ந்த கந்தசாமியின் மகன் செந்தில்குமார் (27). இவர், இப்பகுதியில் லாரியில் சுமை தூக்கும் தொழிலாளியாக இருந்து வந்தார். இவர், செவ்வாய்க்கிழமை மாலை இரு சக்கர வாகனத்தில் அல்லம்பட்டியிலிருந்து பாலவநத்தம் நோக்கிச் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, அல்லம்பட்டி முக்கு ரோட்டில் இவரது வாகனம் மீது, அருப்புக்கோட்டையில் இருந்து விருதுநகர் நோக்கி வந்த லாரி மோதியது.

    இதில், தூக்கி வீசப்பட்ட செந்தில்குமார் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக, விருதுநகர் கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, சென்னல்குடியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் கருப்பசாமியை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai