Enable Javscript for better performance
அம்பேத்கர் பிறந்த நாள் விழா- Dinamani

சுடச்சுட

    

    சிவகாசியில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

     ஆதித்தமிழர் பேரவை சார்பில் அம்பேத்கர் உருவச்சிலைக்கு அக்கட்சியின் மாவட்ட செயாலளர் ஈஸ்வரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்பாளர் பாண்டியம்மாள், துணைத் தலைவர் மாயக்கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    திருத்தங்கலில்....திருத்தங்கல் நகர அதிமுக சார்பில், அங்குள்ள அம்பேத்கர் உருவச் சிலைக்கு அக்கட்சியின் நகர செயலாளரும், திருத்தங்கல் நகர்மன்றத் துணைத் தலைவருமான பொன் சக்திவேல் மாலை அணிவித்து மாரியாதை செலுத்தினார்.

     நிகழ்ச்சியில், மாவட்ட வழக்குரைஞர் பிரிவு இணைச் செயலாளர் கணேசன், நகர அவைத் தலைவர் கோயில்பிள்ளை, ஜெயலலிதா பேரவை செயலாளர் ரமணபிரியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai