Enable Javscript for better performance
அம்பேத்கர் பிறந்த நாள் விழா- Dinamani

சுடச்சுட

    

    விருதுநகர் தலைமை தபால் நிலையத்தில் டாக்டர் அம்பேத்கரின் 126 ஆவது பிறந்த தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது. 

     அஞ்சல்துறை நலச் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி அமைப்பின் அஞ்சல்துறை கோட்டச் செயலாளர் மகாலிங்கம் தலைமை வகித்தார். நல்லாசிரியர் விருது பெற்ற வின்சென்ட் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அஞ்சலக அலுவலர் பரமசிவம் முன்னிலை வகித்தார். இந்த விழாவில் ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. செங்குன்றாபுரம் ஜெயபாண்டி நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai