Enable Javscript for better performance
ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்- Dinamani

சுடச்சுட

    

    ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

    By அருப்புக்கோட்டை  |   Published on : 15th April 2016 08:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அருப்புக்கோட்டை ஸ்ரீஆயிரங்கண் மாரியம்மன் கோயில் பங்குனிப் பொங்கல் திருவிழாவில் புதன்கிழமை இரவு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.

      பகலில் அதிக வெப்பம் மற்றும் வெயில் இருந்ததால் இரவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்தும், சூலாயுதத்தால் அலகு குத்தியும், காவடி எடுத்தும் வந்து அம்மனை வழிபட்டனர். இந்நிகழ்ச்சியின்போது குழந்தை பாக்கியம், கல்வி, தொழில், தேக ஆரோக்கியம் பெற வேண்டி அம்மனை வழிபட்டனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் குழந்தை, ஆண், பெண் வடிவம், வீடு வடிவிலான மண் சிலைகளைக் கொண்டு வந்து கோயிலில் வைத்து வழிபட்டனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய வந்து அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai