Enable Javscript for better performance
இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட  ரூ.1.50 லட்சம் பறிமுதல் - Dinamani

சுடச்சுட

    

    இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட  ரூ.1.50 லட்சம் பறிமுதல்

    By விருதுநகர்  |   Published on : 15th April 2016 08:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் அருகே இரு சக்கர வாகனத்தில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ 1.50 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.

    விருதுநகர்-சிவகாசி சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி அருகே மண்டல துணை வட்டாட்சியர் செந்தில்வேல் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர்  வியாழக்கிழமை அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சிவகாசி ஈஞ்சார் பகுதியைச் சேர்ந்த மகேஷ்குமார், மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த செந்தில் ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் வந்தனர். அவர்களிடம் சோதனையிட்ட போது, உரிய ஆவணங்களின்றி ரூ.1.50 லட்சம் கொண்டு செல்வது தெரிய வந்தது. இதையடுத்து,பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai