Enable Javscript for better performance
சிவகாசியில் மத்திய தேர்தல் பார்வையாளர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    சிவகாசியில் வியாழக்கிழமை மத்திய தேர்தல் பார்வையாளர்  ஆய்வு மேற்கொண்டார்.

     மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இயக்குநரும், மத்திய தேர்தல் பார்வையாளருமான (விழிப்புணர்வு) நரேந்திரகௌசல், சிவகாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்காளர் சேவை மையத்தில் ஆய்வு செய்தார்.

    சிவகாசி தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தியது குறித்தும், நூறுசதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடத்தப்பட்ட விழிப்புணர்வு ஊர்வலம், மனிதசங்கிலி உள்ளிட்டவைகள் குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.

    பின்னர் ரிசர்வ்லைன் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட உள்ள மாதிரி வாக்குசாவடியில் அவர் ஆய்வு மேற்கொண்டார். வாக்குசாவடியில் வாக்களிப்போர் எண்ணிக்கையை அவர் கேட்டறிந்தார். அங்கு மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளதா எனவும் கேட்டறிந்தார்.

    பின்னர் சிவகாசி-வெம்பக்கோட்டை சாலையில் உள்ள சபையர் பிரிண்டோ கிராப் ஆப் செட் அச்சகத்தில் உள்ள தொழிலாளர்களிடையே நூறு சதம் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து அவர் பேசினார். அப்போது தொழிளர்களிடையே மாவட்ட ஆட்சியர் வே.ராஜாராமன் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்துப் பேசினார். பின்னர் அனைவரும் வாக்களிப்பது என தொழிலாளர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai