Enable Javscript for better performance
தூர்வாரப்படாத கண்மாய்கள்...- Dinamani

சுடச்சுட

    

    ராஜபாளையம் தொகுதியில் கடந்த 15ஆண்டுகளாக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளன. ராஜபாளையம் -ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த புறவழிச்சாலை திட்டம், ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் முதல் தென்காசி கொல்லம் பிரதான சாலைக்கு  இணைப்புச்சாலை திட்டம், ராஜபாளையம்-சத்திரப்பட்டி சாலையில் ரயில்வே மேம்பாலம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டு பல ஆண்டுகளாகியும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் அப்பகுதியில் செல்லும் பொதுமக்கள் பெரிது அவதிக்குள்ளாகின்றனர். தொகுதியில் உள்ள பல கண்மாய்கள் தூர்வாரப்படாமல் ஆக்கிரமித்து மழைக் காலங்களில் வரும் தண்ணீர் சாலையில் தேங்கி வீணாகிறது. அய்யனார்கோவில் வனப்பகுதி சுற்றுலாத் தலமாக அறிவிக்கப்பட்டதோடு எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படாமலே உள்ளன. அய்யனார் கோயில் வனப்பகுதியில் ஆற்றை கடந்து கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு பாலம் கட்டப்பட வேண்டும் என்பதே பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai