Enable Javscript for better performance
தொகுதி  ஓர் அறிமுகம்: ஸ்ரீவில்லிபுத்தூர் - 203- Dinamani

சுடச்சுட

    

    திருப்பாவை என்னும் தெய்வீகத் தமிழ் இலக்கியத்தைத் தமிழ் மக்களுக்கு அளித்த பெருமைக்குரியது ஸ்ரீவில்லிபுத்தூர். 11 அடுக்குகள், 192 அடி உயரம் கொண்ட இந்தக் கோபுரமே தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ சின்னமாக விளங்குகிறது. நெசவுத் தொழிலுக்குப் புகழ் பெற்றது இந்த ஊர். பால்கோவா என்றதும் நினைவுக்கு வருவதும் இந்த ஊர் தான்.

    கிராமப் பகுதிகளில் பெரும்பாலான மக்கள் விவசாயத்தை நம்பியுள்ளார்கள். விவசாயம், நெசவு போன்றவையே இந்தத் தொகுதியின் முக்கிய தொழில்களாகும்.

     

    இடம் பெற்றுள்ள பகுதிகள்

    ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு ஆகிய இரு ஊராட்சிகள் இதில் அடங்குகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி 33 வார்டுகளைக் கொண்டதாகும். மம்சாபுரம், வத்திராயிருப்பு, எஸ்.கொடிக்குளம், சுந்தரபாண்டியம், வ.புதுப்பட்டி ஆகிய 5 பேரூராட்சிகள் உள்ளன. வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் 27 ஊராட்சிகளும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 29 ஊராட்சிகளும் உள்ளன.

     

    மொத்த வாக்காளர்கள்

    மொத்தம் வாக்காளர்கள் 2,30,368

    ஆண்கள் 1,13,641

    பெண்கள் 1,16,700

    திருநங்கைகள் 27

    வாக்குச் சாவடிகள் 283

     

    தேர்தல் அலுவலர்

     சி.சங்கரநாராயணன்,

    உதவி ஆணையர் (கலால்)

    செல்லிடப்பேசி எண்: 99441-35205.

     

    முந்தைய தேர்தல்களில் வெற்றி பெற்றவர்கள்

    1967 (தனி) கே.ஏ.ஏ. குருசாமி (திமுக) 36,732

    1971 (தனி) கே.ஆண்டி (எ) குருசாமி (திமுக)      41,522

    1977 (பொது) ரா.தாமரைக்கனி (அதிமுக) 25,990

    1980 (பொது ரா.தாமரைக்கனி (அதிமுக) 46,882

    1984 (பொது) ரா.தாமரைக்கனி (அதிமுக) 54,458

    1989 (பொது) அ.தங்கம் (திமுக) 45,628

    1991 (பொது) ரா.தாமரைக்கனி (சுயே) 38,908

    1996 (பொது) ரா.தாமரைக்கனி (அதிமுக) 49,436

    2001 (பொது) ரா.தா.இன்பத்தமிழன் (அதிமுக) 53,095

    2006 (பொது) தி.ராமசாமி (இந்திய கம்யூ.) 55,473

    2011 (தனி) வெ.பொன்னுப்பாண்டியன்

             (இந்திய கம்யூ.) 73,485

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai