Enable Javscript for better performance
தொகுதி   ஓர் அறிமுகம்: ராஜபாளையம் - 202- Dinamani

சுடச்சுட

    

    விருதுநகர் மாவட்டத்தில் மதுரையில் இருந்து 85 கி.மீ. தென்மேற்கே அமைந்துள்ளது இத் தொகுதி. ராஜபாளையம் நகரம் ஒரு சிறப்பு தர நகராட்சி ஆகும். இத்தொகுதிக்கு அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சி, சாஸ்தாகோவில் நீர்வீழ்ச்சி பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளன. நூற்பு மற்றும் நெசவுத் பருத்தி ஆலைகள், பருத்திக்கான மிகப் பெரிய சந்தை அமைந்துள்ளது. நாய்களுக்கு பெயர்பெற்ற இங்கு சிப்பிப்பாறை, கோம்பை உள்ளிட்ட மற்றும் பல வகையான நாய்கள் உள்ளன. விவசாயத்தையே நம்பியிருந்த காலம் மாறி தற்போது ராஜபாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் வர்த்தக மையமாக உருவாகியுள்ளது.

    தற்போது இங்கு 150க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய நூற்பாலைகள், ஏற்றுமதி நூற்பாலைகள், மருத்துவதுணி தயாரிப்பு நிறுவனங்கள், ஆயுத்த ஆடை நிறுவனங்கள்,விசைத்தறி, கைத்தறி கூடங்கள், பருத்திஅரவை, நெல் அரவை ஆலைகள் அதிகளவில் உள்ளன.

     

    இடம் பெற்றுள்ள பகுதிகள்

    ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் ராஜபாளையம் நகரம், சேத்தூர், செட்டியார்பட்டி பேரூராட்சிகள், மேலப்பாட்ட கரிசல்குளம் உள்பட ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 22 ஊராட்சிகள், ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த  2 கிராமங்கள் உள்பட 24  ஊராட்சிகள்  அடங்கியுள்ளன.

     

    மொத்த வாக்காளர்கள்

    மொத்தம் வாக்காளர்கள் 2,21,788

    ஆண்கள் 1,09,208

    பெண்கள் 1,12,487

    திருநங்கைகள் 21

    வாக்குச் சாவடிகள் 260

     

    தேர்தல் அலுவலர்

    ஆர்.ராஜாராம்

    செல்லிடப்பேசி எண் 94450 00353,

     

    முந்தைய தேர்தல்களில் வெற்றி பெற்றவர்கள்

    1971 கே சுப்பு (இந்திய கம்யூ)       36,827

    1977 கே. தனுஷ்கோடி (அதிமுக)     28,028

    1980 பி. மொக்கையன் (சுயேச்சை)    38,389

    1984 கே. ராமன் (காங்கிரஸ்)        54,670

    1989 வி.பி. ராஜன் (திமுக)          49,137

    1991 டி .சாத்தையா (அதிமுக)       58,657

    1996 வி.பி. ராஜன் (திமுக)          49,984

    2001 எம். ராஜசேகர் (அதிமுக)       61,740

    2006 எம். சந்திரா (அதிமுக)         58,320

    2011 கே. கோபால்சாமி (அதிமுக)    80,125

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai